Saturday, September 12, 2015

thumbnail

னைவருக்கும் மைத்திரி அடித்த நெத்தியடி... !

னைவருக்கும் மைத்திரி அடித்த நெத்தியடி... !

Written By Admin: Arankamnews on | 9/12/2015 06:14:00 PM

உலகின் சமூக, அரசியல் மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் அடிக்கடி மாறி, மாறி இடம்பெறும் போன்று தெரிகின்றது. அவை சில சமயங்களில் விசித்திரமானதாகவே அமைந்துவிடுவதுண்டு. எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்றவகையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன.
அந்தவகையில் அரசியலை பொறுத்தவரை உயர் பதவிகளில் இருக்கின்றவர்கள் பதவி இழப்பதும் முன்னர் இருந்ததைவிட குறைந்த பதவிகளுக்கு செல்வதும் தற்போது அடிக்கடி இடம்பெற்றுவருகின்றன.
அதற்கு அண்மைக்கால சிறந்த உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 10 வருடங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்து விட்டு தற்போது பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கின்றமையை குறிப்பிட்டுக்கூற முடியும்.
இதேவேளை தற்போது நாட்டில் ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த கருத்தொருமைவாத தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த காலங்களில் அமைச்சர் பதவி வகித்த சிலர் இம்முறை தேசிய அரசாங்கத்தில் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் அமைச்சர்களாக பதவி வகித்த சிலர் இம்முறை இராஜாங்க அமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர்.
இந்தவகையில் இவர்களுக்கு இவ்வாறு பதவிகள் குறைந்துள்ளமை தொடர்பில் கவலைகள் இருக்கலாம். சிலர் இந்த கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ""எனக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி கிடைத்திருக்கவேண்டும். ஆனால் கிடைக்கவில்லை. அதற்காக நான் கவலைப்படவில்லை. என்னுடைய சேவையை நான் நாட்டுக்கும் மக்களுக்கும் வழங்குவேன்"" இது அமைச்சரவை அமைச்சுப் பதவி கிடைக்காத பிரதியமைச்சுப் பதவியை ஏற்ற ஒருவர் வெளிப்படுத்திய கருத்தாகும்.
எனக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது. ஆனால் நான் அமைச்சரவை அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்வதற்கு முழுமையான தகுதியுடன் இருக்கின்றேன். ஆனால் கிடைக்கவில்லை மற்றுமொரு இராஜாங்க அமைச்சுப் பதவியை பெற்றவர் வெளிப்படுத்திய கருத்தே இதுவாகும்.
இவ்வாறு அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் தமது கவலைகளை வெளிப்படுத்தும்போது அவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய வலுவான பதில் ஒன்றை வழங்கியுள்ளார்.
கடந்த காலத்தில் அமைச்சர்களாக இருந்து தற்போது பிரதியமைச்சர்களாகவோ இராஜாங்க அமைச்சர்களாகவோ பதவி பெற்றுள்ளவர்கள் கவலையடையவேண்டியதில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் பத்து வருடங்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து விட்டு தற்போது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருக்கமுடியுமாயின் அமைச்சர்களாக இருந்தவர்கள் இராஜாங்க அமைச்சர்களானால் என்ன தவறு உள்ளது. அவ்வாறு இருக்க ஏன் முடியாது?
இதுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைவருக்கும் நெத்தியடியாக வழங்கியுள்ள அறிவுரையாக அமைந்துள்ளது. உண்மையில் மக்களுக்கு சேவையாற்றவேண்டுமாயின் அமைச்சராக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதனை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.
காரணம் ஆளும் கட்சியில் இருந்தாலே அரசாங்கத்தின் தலைமையை வலியுறுத்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம். அமைச்சுப் பதவி கிடைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்களவு செல்வாக்குடன் செயற்படலாம் என்பது உண்மைதான்.
ஆனால் அதற்காக பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு மக்களுக்கு சேவையாற்ற முடியாது என்று கூற முடியாது. கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகளில் இருந்துகொண்டு சில மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு சேவையாற்றிய வரலாறும் உள்ளது.
எனவே தற்போது நாட்டில் வழமைக்கு மாறான வித்தியாசமான இரண்டு பிரதான கட்சிகளையும் கொண்ட அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளது. எனவே மக்களுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றுவதற்கு மக்கள் பிரதிநிதிகள் முன்வரவேண்டும். மக்களை மீண்டும் ஏமாற்றலாம் என்று மக்கள் பிரதிநிதிகள் கருதினால் அது தப்புக்கணக்காகவே அமைந்துவிடும் என்பதனை மறந்துவிடக்கூடாது.
Read More»

thumbnail

CV விக்னேஸ்வரனை பதவிநீக்க முயற்சி நடக்கின்றதா...?

CV விக்னேஸ்வரனை பதவிநீக்க முயற்சி நடக்கின்றதா...?

Written By Admin: Arankamnews on | 9/12/2015 06:19:00 PM

பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாகச் செயற்பட்டிருக்காத வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குவதற்கு கூட்டமைப்பினர் முயற்சித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் அண்மையில் கூடி இது தொடர்பில் ஆராய்ந்திருப்பதாகத் தெரிய வருகிறது. கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்படாததுடன் கூட்டமைப்பின் கருத்துக்களுடன் பல இடங்களில் முரண்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே அவரை பதவி விலக்குவது குறித்து கூட்டமைப்புக்குள் தீவிரமாக ஆராயப்படுவதாகத் தெரிய வருகிறது.

அதேநேரம் இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய மாகாண சபையொன்றின் முதலமைச்சருக்கு எதிராக எவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முடியாதென வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார்.

முதலமைச்சரை நீக்குவதாயின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுநரிடம் கையளிக்க முடியும். மாறாக முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அவர் கூறினார்.

கடந்த கால செயற்பாடுகள் காரணமாக முதலமைச்சர் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு விசனம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. எனினும் இது அவர்களுடைய உள்ளகப் பிரச்சினை அவர்களின் இந்தப் பிரச்சினைக்குள் எதிர்க்கட்சி ஒருபோதும் சிக்கிக்கொள்ளாது என்றும் தவராசா தெரிவித்தார்.

முதலமைச்சரை நீக்குவது தொடர்பில் ஏதேனும் கலந்துரையாடப்பட்டுள்ளதா என்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை குறித்து வடமாகாண சபை முதலமைச்சருக்கும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. இது தொடர்பில் தான் கவலையடைவதாக மாவை சேனாதிராஜா கூறியிருந்தார்.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தான் நடுநிலையாகச் செயற்படப்போவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இதனை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப் பிடத்தக்கது. 
Read More»

thumbnail

ரோசி சேனாநாயக்க, பிரதமர் ரணிலின் ஊடகப் பேச்சாளராக நியமனம்!

ரோசி சேனாநாயக்க, பிரதமர் ரணிலின் ஊடகப் பேச்சாளராக நியமனம்!

Written By Admin: Arankamnews on | 9/12/2015 06:23:00 PM

சிறுவர் அபிவிருத்தி முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகப்பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர், பிரதமர் அலுவலகத்தின் பிரதி தலைமையதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டியிட்ட ரோசி தோல்வியடைந்தார்
இதன் பின்னர் தமது விருப்புத் தெரிவு வாக்குகளை மீளெண்ண வேண்டும் என்று அவர் கோரிய போதும் அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
Read More»

thumbnail

குடும்ப நினைவுச்சின்னத்திற்கு செலவிட்ட பணத்தை மீளச் செலுத்துமாறு மகிந்தவிற்கு பணிப்பு?

குடும்ப நினைவுச்சின்னத்திற்கு செலவிட்ட பணத்தை மீளச் செலுத்துமாறு மகிந்தவிற்கு பணிப்பு?

Written By Admin: Arankamnews on | 9/12/2015 06:51:00 PM

அரசாங்க பணத்தை பயன்படுத்தி மெதமுல்லையில் டீ.ஏ.ராஜபக்ச அறக்கட்டளையினால் நிர்மாணித்த குடும்ப நினைவுச்சின்னத்திற்காக செலவிட்ட பணத்தை மீண்டும் அரசாங்கத்திற்கு செலுத்துமாறு அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இவ் நினைவுச்சின்னம் மற்றும் அருங்காட்சியகம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெற்றோரின் கல்லறையுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.அதற்காக காணி மீட்டல் கூட்டுத்தாபனத்தின் எட்டரை கோடி பணம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க பணத்தை தனியார் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தவறு என்பதனால் அப்பணத்தை மீண்டும் செலுத்துமாறு இதனூடாக டீ.ஏ.ராஜபக்ச அறக்கட்டளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்பணத்தை செலுத்துவதாக தேர்தலுக்கு முன்னர் டீ.ஏ.ராஜபக்ச அறக்கட்டளையினர் குறிப்பிட்டிருந்தனர் எனினும் இதுவரையில் அப்பணம் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் குறித்த கல்லறை நினைவுச்சின்னம் குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More»

Sunday, September 6, 2015

thumbnail

இன்று இடம்பெறும் ஐக்கிய தேசிய கட்சியின் அறுபத்து ஒன்பதாவது வருட நிறைவு

ஐக்கிய தேசிய கட்சியின் அறுபத்து ஒன்பதாவது ஆண்டு நிறைவு இன்றாகும் இதனையொட்டி அக்கட்சி விஷேட சம்மேளனம் ஒன்றை நடத்துகிறது.கொழும்பில் உள்ள சிரிக்கொத்த கட்சி தலைமையகத்தில் பிரதமர் ரணில் தலைமையில் இடம்பெறும் இந்த சம்மேளனத்துக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த கட்சி சம்மேளனத்தில்   ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொள்வார் என தெரிவிக்கபடுகிறது.
ஐக்கிய தேசிய கட்சி நடத்தும் கட்சி சம்மேளனம் ஒன்றில் சுதந்திர கட்சி தலைவர் ஒருவர் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளும் முதல் சந்தர்ப்பம் இது என தெரிவிக்கபடுகிறது.
குறித்த நிகழவில் ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் இணைந்துகொண்ட கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கபடுகிறது.
Read More»

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Tags

Blogger template. Proudly Powered by Blogger.
back to top